Skip to main content

Panier

Vous profitez des avantages réservés aux VIP !

Article(s) non disponible(s) à la vente
Veuillez vérifier votre panier. Vous pouvez supprimer le ou les articles qui ne sont pas disponibles maintenant ou nous les supprimerons automatiquement au moment du règlement de la commande.
articlesarticle
articlesarticle

Recommandé pour vous

Loading...


« sandilyan »

1-12 sur 70 résultats pour « sandilyan »
Skip side bar filters
  • ஜலதீபம் - இரண்டாம் பாகம்

    par sandilyan ...
    காஸ்ட்ரோ திறமையுடன் போரை நடத்தி எதிரி கப்பலைப் பிடித்தான். ஆனால் இதயசந்திரனை அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உள்ளூரப் புகைந்த வஞ்சக எண்ணங்களைப் புன்சிரிப்பால் மறைத்தான். இதயசந்திரனை எல்லா மாலுமிகளுக்கும் எதிரில் பாராட்டி அவனைப் பீரங்கி இயக்கும் வேலைக்கு உயர்த்தினான். ஆனால் உள்ளூர பல திட்டங்களை வகுத்துக் கொண்ட காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தான்.மஞ்சுவைச் சரிப்படுத்தாமல் தான் எதுவும் செய்ய முடிய ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • சேரன் செல்வி

    par sandilyan ...
    இளமதி சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்துத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஒரே ஒரு முத்தாரத்தைக் கையால் நெருடினாள். அப்படி முத்தா ரத்தை அவள் நெருடியிராவிட்டால் அந்த வாலிபனும் அவளை நோக்கி வாயைப் பிளந்திருக்க மாட்டான். நிலை குத்திய கண்களுடன் நின்றிருக்கவும் மாட்டான், முத்தாரம் வளைந்து கிடந்த இளமதியின் செக்கச் செவேலென்ற கழுத்து அந்த வாலிபனைத் திகைக்க வைத்தது. அவள் நெருடிய விரல்களின் அழகும் முத்த ... En savoir plus

    $7.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • இந்திரகுமாரி

    par sandilyan ...
    மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவின் கரடுமுரடான பாதையில் தலைகால் தெரியாமல் பாறைகளைத் தாண்டித் தாண்டி புரவியோட, அதன் மீது அலட்சியமாக அமர்ந்திருந்த அந்த முரட்டுப் பெண்ணை மலைச்சரிவின் இடைவில் உட்கார்ந்திருந்த சண்டதண்டன் மிகுந்த அச்சத்துடனும் கவலையுடனும் பார்த்துத் துன்பப் பெருமூச்செறிந்தான். நடு வயதை எட்டிக் கொண்டிருந்தாலும் இடைவிடாத உழைப்பினாலும் போர்களாலும் இளமை அதிகமாக மாறாத சண்டதண்டன், தனது பருத்த ப ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • ராஜமுத்திரை - முதல் பாகம்

    par sandilyan ...
    இந்த நிலையைக் கண்ட இளநங்கை, சாதாரணமாக மூன்றாம் ஜாமத்தில் மூடப்படும் கடைவீதி அன்று நான்காம் ஜாமம் வரை கண்டிப்பாய் நீடிக்குமென்பதைப் புரிந்து கொண்டாள். ஏதோ புது மரக்கலங்கள் நாலைந்து வந்திருந்தால் தான் நள்ளிரவுக்குப் பின்பும் கூட்டம் வந்து கொண்டிருக்குமென்பதை அவள் உணர்ந்திருந்தாளாதலால், சீக்கிரம் தான் வாங்க வந்திருந்த இரண்டொரு பொருள்களை வாங்கிக் கொண்டு இல்லம் திரும்பத் தீர்மானித்து, முத்து விற்கும் ... En savoir plus

    $8.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • கடல் புறா - முதல் பாகம்

    par sandilyan ...
    அக்கம் பக்கத்தில் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டே கோடியிலிருந்த தனியிடமொன்றை அடைந்த சுங்க அதிகாரி, இளைஞன் அருகில் வந்ததும், "நீங்கள் அணிந்துள்ள மோதிரத்தின் மதிப்புத் தெரியுமா உங்களுக்கு?" என்று பயத்துடன் வினவினான்.அவன் சொற்களின் உண்மைக் கருத்தைப் புரிந்து கொண்டாலும், புரியாதது போல் நடித்த இளைஞன், "தெரியும், ஆயிரம் பொற்கழஞ்சுகள். அதற்குச் சுங்கம் உண்டானால் விதியுங்கள்" என்று கூறி சுங்க அதிகாரியைக ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • பல்லவ திலகம்

    par sandilyan ...
    அந்தக் கோபுர உச்சி தீபத்தை நீண்டநேரம் பார்த்து விட்டு அக்கம் பக்கத்தையும் பார்த்த இதயவர்மன், நள்ளிரவிலும் நடமாட்டம் இருந்த அந்த ராஜவீதியைக் கண்டு மகிழ்ச்சியுற்றான். உச்சிகால மணி அடித்து விட்டதால் தூரத்தே தெரிந்த சக்கரவர்த்தியின் அரண்மனையில் காவல் மாறியதன் காரணமாகச் சில விநாடிகளே நின்ற காவல் வீரர்களின் எச்சரிக்கைக் கோஷம் மீண்டும் துவங்கிவிட்டதையும், அந்தக் கோஷம் துவங்குவதற்கு முன்பே அடங்க வேண்டிய ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • யவன ராணி - இரண்டாம் பாகம்

    par sandilyan ...
    கப்பலில் அரவம் அடியோடு அடங்கிவிட்டதால் எரித்திரியன் கடலில் சூழ்நிலை மிகப் பயங்கரமாகி விட்டது. ஏதோ 'ஹோ'வென்று பெரும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சுழற்றியடித்த தென்மேற்குப் பருவக் காற்றுக் கூட இடையிடையே ஊதி ஊதிச் சப்தம் செய்து ஊழிக் காற்று ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்குச் சான்று காட்டியது. அந்த ஊதல் காற்றுக்கிடையே மிதந்து வருபவனைப்போல் ஓசைப்படாமல் வந்து இளஞ்செழியன் பக்கத்தில் நின்று கொண்ட ... En savoir plus

    $8.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • துறவி

    par sandilyan ...
    தேவகிரி யாதவகுல மன்னன் மகாதேவனின் மகா மந்திரியும் சிறந்த கவியுமான ஹேமாத்ரி நறுக்கு ஓலைகளில் தான் வடித்துக் கொண்டிருந்த கவிதைகளில் ஆழ்ந்து கிடந்ததால், தனது காலடியில் வணங்கி எழுந்து பயபக்தியுடன் நின்றிருந்த ராஜபுத்திரி குலவதியை ஏறெடுத்தும் பார்த்தாரில்லை. அவர் எழுத்தாணி ஓடிக்கொண்டிருந்த வேகத்தைக் கவனித்த குலவதியும் அவருடைய சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க இஷ்டப்படாமலும் உதடுகளைக்கூட அசைக்காமலும் பேசாமல் ந ... En savoir plus

    $4.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • மலைவாசல்

    par sandilyan ...
    சித்ரா அவனைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கினாள். சுமார் ஆறடி உயரத்துக்கு மெல்லிய சரீரத்துடன் ஆஜானு பாகுவாய் நின்றிருந்த அஜித் சந்திரன் பார்வைக்கு அழகாகவே இருந்தான். இருபத்து நான்கு வயதாகியும் அவன் முகத்தில் குழந்தைக் களை மட்டும் போகவில்லை. முகத்தில் தீக்ஷண்யமாய் பிரகாசித்துக் கொண்டிருந்த இரண்டு கண்கள் மட்டும் உபாத்தியாயனை அடியோடு குழந்தையாக்கிவிட முடியாதென்பதை நிரூபித்தன. அவன் கண்களைச் சந்தித்ததும் ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • நாகதீபம்

    par sandilyan ...
    "அந்த நாகரத்தினக் கல்லைக் கொண்டு வந்தால் போரை நிறுத்திவிடுவீர்களா?" என்று சந்தேகம் குரலில் பூரணமாகத் தொனிக்க வினவினான்."ஆம்" என்று திட்டமாக அறிவித்தார் சக்கரவர்த்தி."தங்களிடம் நவரத்தினங்களுக்குக் குறைவா?""இல்லை""பின் அந்த நாகரத்தினம் எதற்கு?""நூர்ஜஹான் விரும்புகிறாள்."இதைக் கேட்டதும் ஹரிதாஸ் ஜாலாவின் சந்தேகம் சிறிது விலகியது. நூர்ஜஹானைத் திருப்தி செய்ய சக்கரவர்த்தி எதையும் செய்வார் என்பதை பாரதமே ... En savoir plus

    $5.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • அலை அரசி

    par sandilyan ...
    அந்த மரக்கலம் கடலின் அந்த இருளிலும் அலைகள் மந்தமாகிவிட்டதால் ஏற்பட்ட அமைதியிலும் மாலுமிகளே இல்லாததாலோ என்னவோ எந்தவித அரவமும் இல்லாமல் பிசாசைப் போல் நின்று கொண்டிருந்தது. அத்தகைய அந்த மரக்கலம் எங்கிருந்து வந்தது? எந்த நாட்டைச் சேர்ந்தது? என்பதை அறிய எந்தவித அடையாளங்களையும் அதில் காணோம். இளவழுதியும் அராபியனும் அந்த மரக்கலத்தில் ஏறிய பிறகு திடீரென மேகங்கள் சூழ்ந்து பெரிய ஒரு மின்னல் அந்த மரக்கலத்தின் ... En savoir plus

    $6.99 CAD ou Gratuit avec Kobo Plus

  • மலை அரசி

    par sandilyan ...
    சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்பை நோக்கிய மார்வார் ராஜபுத்திரனான ராவ்ஜோடா சந்தேகமறப் புரிந்துகொண்டான். எங்கும் வெள்ளை வெளேரென்று தெரிந்த அந்தப் பாலைவனத்துக்கு தனது கிரணங்களால் அதிகப்படியான தீட்சண்யத்தையும் பளபளப்பையும் பிற்பகல் கத ... En savoir plus

    $7.99 CAD ou Gratuit avec Kobo Plus